Home » அரசியல் பிரச்சினைக்கும் அபிவிருத்திக்கும் தீர்வு
வடக்கு மக்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேறும்

அரசியல் பிரச்சினைக்கும் அபிவிருத்திக்கும் தீர்வு

யாழ். முற்றவெளியில் EPDP ஏற்பாடு செய்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

by Damith Pushpika
September 15, 2024 6:15 am 0 comment

வடக்கின் விடயங்களை அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது. அப்பிரதேசத்துக்கு அபிவிருத்தியும் அவசியம். இல்லையெனில் ஏனைய மாகாணங்கள் முன்னேறுகையில் வடக்கு பின்தங்கிவிடுமெனவும் வடக்கின் அபிவிருத்தியை போன்றே அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நேற்று (14) நடைபெற்ற “ரணிலால் இயலும்” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,மாகாண சபைகளை வலுப்படுத்தி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக எனது கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்துக்கு உதவும் வகையில் 09 மாகாண சிற்றரசுகளின் கீழ் அபிவிருத்தி வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படும்.

அத்துடன், தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு (TRC) ஸ்தாபிக்கப்படும். நவாஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக எதிர்வரும் 05 வருடங்களில் காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமார திஸாநாயக்க, தென்னிலங்கையில் மாகாண சபைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

இன்று யாழ்ப்பாணம் வந்து மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் இந்த விடயங்கள் தொடர்பாக அவர் மக்களுக்கு உறுதிமொழி அளிக்க வேண்டும்.

கடந்த பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து நாட்டிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களும் நம்பிக்கை இழந்திருந்த நிலையில், அவர்களுக்கு நம்பிக்கையை வழங்குவதற்காக நாம் பாடுபட்டோம். “இயலும் ஸ்ரீலங்கா” திட்டத்தின் மூலம் நாட்டின் எதிர்காலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது நாட்டின் பொருளாதார வாயில்கள் திறந்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை வலுவாக தொடராவிடின் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்திள்ளது. நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.

இன்னும் 03 வருடங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் எவராலும் உடைக்க முடியாது.

வடக்கை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமொன்று வடக்குக்கு அவசியம் எனவும் சஜித் பிரேமதாசவிடமோ அநுரகுமாரவிடமோ அதற்கான தீர்வு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க குறிப்பிட்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division