57
மனிதனின் கர்வம்
நொருங்கும் இடம்.
மரம்!
தன் வாய்ப்பை
நோக்கி மேலே வளரும்.
மனிதன் மரத்திடம்
கற்க வேண்டிய குணம்.
அருவி!
பிறப்பது மலையானாலும்
கரைவது கடல் தான்.
மனிதா! நீ
பிறப்பது மாளிகையானாலும்
கரைவது மண்ணில் தான்.
சூரியனை மறைக்க
மேகங்கள் முயலலாம்.
மேகங்கள் நிலையற்றது
காற்று வந்ததும்
கைகோர்த்துச் சென்று விடும்.
மனிதா! உன்
மன வலிமையை
துன்பமேகங்கள் மறைக்க முயலும்,
நம்பிக்கையும் தைரியமும்
உன்னிடம் கைக் கோர்த்ததும்
சூரியனைப் போல்
நீயும் பிரகாசிப்பாய்.
இயற்கை!
நாம் கற்றுக் கொள்ளக் கிடைத்த
பணம் வாங்காத
பள்ளிக் கூடம்.