இலங்கை, இந்தியா உட்பட இந்திய துணை கண்ட நாடுகளில் அதிகளவிலானோர் உள்ளாகியுள்ள கடுமையான முழங்கால் வலி நோய்க்கு மயக்கமருந்து, அறுவை சிகிச்சை மற்றும் தழும்புகள் எதுவுமற்ற முறையில் மேற்கொள்ளக்கூடிய வலி நிவாரண சிகிச்சையொன்று சென்னை மியாட் இன்டர்நஷனல் வைத்தியசாலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெனிகுலர் ஆர்டரி எம்போலைசேஷன் (Genicular Artery Embolization) என்ற பெயர் கொண்ட இச்சிகிச்சை குறித்து இலங்கை மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான செய்தியாளர் மாநாடொன்று கொழும்பு மரினோ பீச் ஹோட்டலில் அண்மையில் நடாத்தப்பட்டது. இச்செய்தியாளர் மாநாட்டில் வைத்தியசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் டொக்டர் பிரித்வி மோகன்தாஸ், பணிப்பாளர் டொக்டர் கார்த்திகேயன் தாமோதரன், டொக்டர் அஸசயான் சபீக் ஆகியோர் இச்சிகிச்சை தொடர்பில் விளக்கமளித்தனர். இச்சமயம் உரையாற்றிய டொக்டர் பிரித்வி மோகன்தாஸ், சென்னையிலுள்ள மியாட் வைத்தியசாலையில் தான் இவ்வகை சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு பிரத்தியேகமான நோய்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 1999 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இவ்வைத்தியசாலை 63 விஷேட பிரிவுகளுடன் ஆயிரம் படுக்கைகளைக் கொண்டுள்ளது. 250 முழு நேர மருத்துவர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். எமது வைத்தியசாலை உலகிலுள்ள 130 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் பயன்பெறக்கூடியளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது.
மூட்டு வலி காரணமாக பெருமளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உடற்பயிற்சி இன்மை, தவறான உணவுப்பழக்கம் என்பன பெரிதும் பங்களிக்கின்றன. என்றாலும் தற்போதைய சூழலில் இந்த முழங்கால் மூட்டு வலி உபாதைக்கு மூட்டு மாற்று அறுசை சிகிச்சை தீர்வாக முன்வைக்கப்பட்டாலும் அந்த சிகிச்சையை எல்லோருக்கும் மேற்கொள்ள முடியாது.
இவ்வாறான சூழலில் தான் மயக்கமருந்து, அறுவை சிகிச்சை மற்றும் தழும்புகள் எதுவுமற்ற முறையில் மேற்கொள்ளக்கூடிய வலி நிவாரண சிகிச்சையாக ஜெனிகுலர் ஆர்டரி எம்போலைசேஷன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இச்சிகிச்சை பெற்றுக் கொள்பவர்கள் நாட்கணக்கில் வைத்தியசாலையில் தங்கியிருக்க வேண்டியதில்லை. அதனால் இச்சிகிச்சை தொடர்பில் இலங்கைப் பிரஜைகள் மேலதிக விபரங்களை கொழும்பு – 3, கொள்ளுப்பிட்டி, குயின்ஸ் வீதியிலுள்ள இலக்கம் 30 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.