அசட்லைன் பைனான்ஸ் லிமிடட் பதுளை கிளை அண்மையில் இல 30, ரோஸ் ஹோர்ஸ் வீதி, பதுளை என்ற இடத்தில் அமைந்துள்ள புதிய கட்டடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தப் புதிய இடம் வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவைகளை எளிதாக அணுகும் வாய்ப்பைக் கொடுக்கும்.
வாடிக்கையாளர்கள், இந்தப் பகுதியில் உள்ள அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள் அசட்லைன் மற்றும் டேவிட் பீரிஸ் குழுமத்தின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த எளிமையான நிகழ்வில் கலந்துகொண்டதுடன், அசட்லைன் பைனான்ஸ் லிமிடட் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி மகேஷ் த.சில்வா புதிய கட்டடத்தைத் திறந்துவைத்தார்.
குறிப்பாக பதுளையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள், மரக்கறி விவசாயிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களினதும் நிதித் தேவைகளைப் பூர்த்திசெய்ய அசட்லைன் பைனான்ஸ் அர்ப்பணிப்புடன் உள்ளது. வாகன லீசிங் மற்றும் கடன், வர்த்தக மற்றும் செயற்பாட்டு மூலதனக் கடன், நிலையான வைப்பு, லிய திரிய பெண்களை வலுவூட்டும் கடன், சூரியசக்தி தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கான வழங்கப்படும் பசுமைக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் தீர்வுகள் அசட்லைன் பைனான்ஸ் சேவையில் உள்ளடங்குகின்றன.
அசட்லைன் பைனான்ஸ் பதுளை கிளையை நவீன கட்டடத்திற்கு இடமாற்றம் செய்வது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதம செயற்பாட்டு அதிகாரிமகேஷ் த.சில்வா குறிப்பிடுகையில், “எங்கள் பதுளை கிளையை புதிய கட்டடத்திற்கு மாற்றுவது வசதிகளை அதிகரிக்கும் அதேநேரம், அப்பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப நிதித் தீர்வுகளை வழங்குவதில் எங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது. என்றார்.