இலங்கையின் பொப் பாடகியான யொஹானி, இசைக் கலைஞரான சீன் போல் மற்றும் கேஸ் உடன் இணைந்து ஐ.சி.சி.T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கையரின் உத்தியோகபூர் பாடலை வெளியிட்டுள்ளார். இது யொஹானி, சீன் போலுடன் இணைந்து வெளியிடும் முதல் இசையாகவும் உள்ளது.
இந்தப் பாடல் இலங்கை கிரிக்கெட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருப்பதோடு ரசிகர்களை அணிவகுப்பதாக உள்ளது. இது யொஹானியின் சர்வதேச செல்வாக்கை அதிகரிப்பதாக அமைந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணிக்குப் பின்னால் ரசிகர்களை அணிதிரட்டும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பாடல் அனைத்து பிரதான தளங்களிலும் தற்போது வெளியாகியுள்ளது. இலங்கைக் கிரிக்கெட்டின் உணர்வை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதாகவும் அணியின் முயற்சிகள் மற்றும் தேசிய பெருமையை கொண்டாடுவதாகவும் இந்தப் பாடல் உள்ளது. இதற்கு இலங்கையின் பாடலாசிரியரான முர்ஷாத் ஹுவைஸ், லக்மினா மற்றும் டிலஞ்சன் செனவிரத்ன ஆகியோர் பங்களிப்புச் செய்துள்ளனர்.