பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் திறன் கடந்த 04 வருடங்களில் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
அண்மையில் வெளியிடப்பட்ட உயர்தரப் பெறுபேறுகளின்படி இவ்வருடமும் 45,000 மாணவர்கள் பல்கலைக்கழக கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் 2020ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது அதிகரித்து வருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
அதாவது 2020 இல் 30,000 மாணவர்களாக இருந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டாகும் போது 45,000 மாணவர்களாக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.