திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் சுமார் 70 மாணவர்களின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் அம்மாணவர்கள் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர்.
பரீட்சைகள் திணைகளத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக காதுகளை மறைத்து பர்தா அணிந்து பரீட்சை எழுத முடியாது. எனினும், இம்மாணவர்கள் அவ்வாறு பரீட்சைகள் எழுதியதால் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் தாம் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலைமை குறித்து ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவந்த மாணவர்கள், தமக்கு உரிய தீர்வை பெற்றுதர நடவடிக்கைகைள எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் தாம் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலைமை தொடர்பாக ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வந்த இம்மாணவர்கள், தமக்கு உரிய தீர்வை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுத் தருவதாகவும் மாணவர்களிடம் உறுதியளித்துள்ளார்.