10,000 க்கும் மேற்பட்ட மீள்பயன்பாட்டு சுகாதாரத் துவாய்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்திற்கான அதன் அர்ப்பணிப்பை MAS இன் Femography மேலும் அதிகரித்துள்ளது. இந்த நன்கொடைகள் மாதவிடாய் சுகாதாரத் துவாய் வறுமையை ஒழிப்பதற்காகப் போராடி இந்நாட்டுப் பெண்களின் வாழ்வை வலுவடையச் செய்யும் நோக்கில் செய்யப்பட்டன. பெண்களின் விசேட தேவைகளுக்கு தீர்வு காணும் முயற்சியாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமானது, பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் 2000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உதவிகளை வழங்குவதாகும். Femography ‘Run for Her’ வேலைத் திட்டத்துடன் இணைந்து, இந்த மீள்பயன்பாட்டு சுகாதார துவாய் நன்கொடை மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கான நிதி மற்றும் விழிப்புணர்வைத் திரட்டியது.
பெண்மையின் படைப்புத்திறன் மற்றும் பராமரிப்பு ஆற்றலால் ஈர்க்கப்பட்ட ஆடைகள் மூலம் பெண்களுக்கு நல்ல ஆரோக்கியம், பெருமை மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட Femography, பெண்களின் சுகாதாரத்திற்கான பாரம்பரிய வரம்புகளுக்கு எதிராக நிற்கும் FemTech ஆடைத் துறையில் ஒரு முன்னோடியாகவும் குறிப்பிடலாம். அதனால்தான், பெண்களின் சுகாதாரத்தில் புத்தாக்கங்கள், ஒருமுறை தூக்கி எறியக்கூடிய சுகாதாரப் பொருட்கள் முதல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சுகாதாரப் பொருட்கள் வரை பெண்களின் நல்வாழ்வுக்கு பெரும் பங்களிப்பைச் செய்ய அவர்கள் உழைத்துள்ளனர்.
பெண்களின் மாதவிடாய் சுகாதார சவால்களை நிவர்த்தி செய்வதில் Femographyயின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் மட்டுமல்லாது, இந்த திட்டம் Femographyயின் சமூகப் பொறுப்பு மற்றும் புத்தாக்கத்தின் நோக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறது எனத் தெரிவித்தார்.