கொலன்ன மெனுபக்ஷ்ரிங் லிமிடெட் Star Garments குழுமம் (“Star”) தனது புதிய விரிவாக்க செயற்பாடான, கொலன்ன மெனுபக்ஷ்ரிங் லிமிடெட்டின் சொத்துகளை கையகப்படுத்தும் செயற்பாடுகளை பூர்த்தி செய்திருந்தது. குழுமத்தின் பன்னிரண்டாவது தொழிற்சாலையாக இது அமைந்திருப்பதுடன், இரத்தினபுரி மாவட்டத்தில் 1000 க்கும் அதிகமான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்திருக்கும். உலகின் இதர பாகங்களுக்கு, இலங்கையின் ஆடை ஏற்றுமதிகளுக்கு காணப்படும் வாய்ப்புகளை விரிவாக்கம் செய்வதற்கு காணப்படும் வாய்ப்புகளை பயன்படுத்தி, செயலாற்றுவதற்கான Star’இன் நம்பிக்கைக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இந்த கையகப்படுத்தல் தொடர்பில் Komar இன் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சார்ளி குமார் கருத்துத் தெரிவிக்கையில், “ஆடைகள் உற்பத்தியில் முழுமையான வளங்களையும் வெளிப்படுத்தாத நாடாக இலங்கை அமைந்துள்ளது எனும் எமது நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும், இலங்கைக்கான எமது நீண்ட கால அர்ப்பணிப்பை மீள உறுதி செய்வதாக இந்த முதலீடு அமைந்துள்ளது. Komar ஐப் பொறுத்தமட்டில் Star தொடர்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும் என்பதுடன், எதிர்வரும் ஆண்டுகளில் இந்தப் பிரிவின் வளர்ச்சியை தொடர்ந்தும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.” என்றார்.
நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலான அனுபவத்துடன், இலங்கையின் ஆடைகள் உற்பத்தித் துறையின் வளர்ச்சியில் Star முக்கிய பங்காற்றியுள்ளது.