Home » மூன்றாவது முறையாகவும் ஆட்சியை கைப்பற்றிய பா.ஜ.க

மூன்றாவது முறையாகவும் ஆட்சியை கைப்பற்றிய பா.ஜ.க

இதோ ஒரு இமாலய வரலாற்றுச் சாதனை

by Damith Pushpika
June 9, 2024 6:17 am 0 comment

இந்திய மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதோடு. மூன்றாவது முறையாக பிரதமர் பொறுபேற்க இருக்கும். நரேந்திர மோடிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன. பல்வேறு விதமான கருத்துக் கணிப்புகளை எல்லாம் முறியடித்து மக்கள் வேறுமாதிரியான தீர்ப்பு வழங்கியிருப்பது கட்சிகளுக்கு வியப்பாகவே இருக்கிறது. இந்தத் தேர்தலின் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று நான் முன்பே கணித்து எழுதியிருந்தேன். எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டுக்கும் இடையிலான வெற்றி மிக நெருக்கமாகவே இருக்கும். ஐம்பது தொகுதிகள் தான் வெற்றியை நிர்ணயிக்கும் என்று நான் எதிர்பார்த்தது சரியாகவே நடந்திருக்கிறது.

தேர்தல் களம் அரசியல் கட்சிகளுக்கு படிப்பினைகளைக் கொடுக்கும். என்பது பொதுவாகவே எல்லா தேர்தல்களிலும் வாடிக்கையானது தான். ஆனால், இந்தத் தேர்தல் முற்றிலும் வித்தியாசமானதாக நடந்திருக்கிறது.

பத்து ஆண்டுகள் அசுர பலத்துடன் ஆட்சியில் இருந்தவர் நரேந்திரமோடி. இந்தத் தேர்தலில் மீண்டும் அமோக வெற்றி பெறுவார் என்று. எதிர்பார்த்த நிலையில் தட்டுத்தடுமாறி ஆட்சியைப் பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இந்த விழ்ச்சிக்கு காரணம் என்ன என்று பார்த்தால் நம்பிக்கையோடு எதிர்பார்த்த உத்திரபிரதேசம் கை கொடுக்கவில்லை. ஏற்கனவே கைவசம் இருந்து இழந்த 60 தொகுதிகளில் பாதிக்கு மேல் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

உத்திரபிரதேசத்தில் இராமர் கோயில் கட்டப்பட்டதால் மீண்டும் நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அங்கே அதிக இடங்களில் தோல்வியை சந்தித்திருப்பது பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி ஒரு தோல்வியை சந்திப்போம் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள், உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பதும் ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த வெற்றிக்கு ராகுல் காந்தியின் நடைப் பயணமும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

மொத்தமுள்ள 593 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 232 தொகுதிகளையும், தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுக்களையும் கைப்பற்றியிருப்பதால் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லை. இந்தத் தேர்தல் ஒரு அரசியல் கட்சிக்கு எதிரான போராட்டம் அல்ல. அரசியல் சட்டத்தை காப்பதற்கான போராட்டமாகத்தான் இந்த தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது என்று ராகுல் காந்தி குறிப்பிடுவதிலும் உண்மை இருக்கிறது. பா.ஜ.க தலைமையிலான முந்தைய பத்தாண்டுகால ஆட்சியில் அதிகாரத்தின் மூலம் மக்களையும். எதிர்க்கட்சிகளையும் ஒடுக்க வேண்டும் என்று செயற்பட்டதன் விளைவுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள் என்பதும் உண்மையே.

இது ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சிக்கும் விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகவே எடுத்துக் கொள்ளலாம். சர்வாதிகாரம் வெற்றி பெற்றதாய் சரித்திரம் இல்லை. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எடுத்த இரண்டு முடிவுகள் தான் அவர்களின் வெற்றியைத் தக்க வைத்திருக்கிறது. ஒன்று ஆந்திர மாநிலம் சந்திரபாபு தலையிலான தெலுங்கு தேசம் கட்சியை மீண்டும் இணைத்துக் கொண்டது. இரண்டாவதாக பீகார் மாநிலம் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியை கூட்டணியில் இணைத்துக் கொண்டது.

ஆந்திராவில் முதலில் ஜெகன் மோகன் தலைமையிலான ஆளும் ஒய் எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் பா.ஜ.க முதலில் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி முடிவு செய்யப்பட்டதால். இந்தக் கூட்டணி அங்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும். மக்களவைத் தேர்தலிலும் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இரண்டாவதாக பிகார் மாநிலம் நிதிஷ் குமாரை கூட்டணியில் சேர்த்ததும் வெற்றிக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியா கூட்டணி உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ்குமார் தான். ஆனால், தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் இந்தியா கூட்டணியிலிருந்து விலகி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து கொண்டார். நிதிஷ் குமாரின் இந்த முடிவு பா.ஜ.க.வுக்கு பலமாக அமைந்திருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளின் ஆதரவும் இல்லை என்றால் பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைக்க முடியாமலே போயிருக்கும். அதேபோல இந்த கட்சிகளும் பா.ஜ.க.வின் கடிவாளமாகவும் மாறியிருக்கிறது. ஆட்சிப் பொறுப்பில் இரண்டு கட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது. முக்கியத்துவம் தரவில்லையெனில் கூட்டணியிலிருந்து வெளியேறவும் வாய்ப்புள்ளது.

மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிைணந்து அமைத்த இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டுமானால் 38 இடங்கள் கூடுதலாக தேவைப்படுகிறது. ஆகையால் நிதிஷ் குமா, சந்திரபாபு நாயுடு இருவரிடமும் ஆதரவு கேட்க இந்தியா கூட்டணியும் முயற்சி செய்து வருகிறது.

பா.ஜ.க தலைமையிலான ஆட்சி அமைவதற்கு முன்பாகவே மத்திய அமைச்சரவையில் 4 கேபினட் அமைச்சர்கள். ஒரு இணையமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கோரிக்கை வைத்திருக்கிறார், சந்திரபாபும் இதே போன்று கோரிக்கையை முன்வைக்கலாம். பா.ஜ.க.வும் வேறு வழியில்லாமல் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

மூன்றாவது முறையாக, பிரதமர் பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு அவரது எதிர்க்கட்சிகள் மீதான விமர்சன பாணிக்கு எதிராகவும், மக்களின் தீர்ப்பு உறுதியாக அமைந்துள்ளது.

இது ஒரு தெளிவான தார்மீக தோல்வி என்பதைத் தாண்டி. தனிப்பட்ட முறையில் அவருக்கு ஒரு பெரிய அரசியல் இழப்பாகும், என்று கங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்திருப்பது அவதானிக்க வேண்டிய விடயம்.

அரசியலில் சாணக்கியர் என்று சொல்லிக் கொண்ட அமித்ஷா தான் விரித்த வலையிலேயே மிகவும் மோசமாக மாட்டிக் கொண்டார்.

இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணியும் முக்கிய பங்கு வசிக்கிறது, நாற்பது தொகுதிகளும் நமக்கே என்று தமிழ்நாட்டு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த தேர்தல் பரப்புரையும் நல்ல பலனைத் தந்திருக்கிறது.

நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்று மற்ற மாநிலங்களுக்குக் கிடைக்காத சிறப்பை தி.மு.க கூட்டணி பெற்றிருக்கிறது. இந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது. கொள்கையில் உறுதியும், இலட்சியப் பார்வையும், திட்டமிட்ட உழைப்பும், தெளிவான வியூகமும் இருந்தால் நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளையும் வெல்லவும் முடியும். அதன் மூலம் நாட்டை வழிநடத்தும் ஆற்றலுடன் செயல்படவும் முடியும் என்பதை தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன என்று ஸ்டாலின் கூறியுள்ளது வருங்கால தேர்தல் காலத்துக்கு அவசியமானது என்றே எடுத்துக் கொள்ளலாம்.

மதவாதத்தையும், வெறுப்பு அரசியலையும், விதைக்க நினைப்பவர்கள் தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்றி விட வேண்டும் எனத் திட்டமிட்டனர். வன்ம விதைகளைத் தூவி, வதந்தி நீர் ஊற்றி வளர்க்கப் பார்த்தனார். பிரதமர் நரேந்திர மோடி எட்டுமுறை தமிழ்நாட்டுக்கு வந்து. பரப்புரையில் ஈடுபட்டும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. தி.மு.க வெறுப்புப் பரப்புரை செய்யவில்லை, பொறுப்பான முறையில் தேர்தல் களத்தில் தன் கடமையை ஆற்றியது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division