- நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு
- ஜூன் மாத கொடுப்பனவும் அதே மாதம் வழங்க ஏற்பாடு
நலன்புரி சபையினால் அதிகரிக்கப்பட்ட முதியோருக்கான 2024 மே மாத கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தேவையான சுமார் 1,518 மில்லியன் ரூபா நிதி மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. தொழில்நுட்ப காரணங்களினால் கொடுப்பனவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தாலும், ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தின் பின்னர் பிரதேச செயலகங்களில் வழமையான முறையில் முதியோருக்கான கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் நலன்புரி நன்மைகள் சபை அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் ஜூன் மாத கொடுப்பனவும் அதே மாதத்திலேயே வழங்கப்படும் என்றும், அஸ்வெசும கொடுப்பனவு கட்டமைப்பின் கீழ் உரிய வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பிலிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சபை அறிவித்துள்ளது.