வங்காள விரிகுடாவில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று (25) பாரிய சூறாவளியாக வலுப்பெற்று பங்களாதேஷை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சூறாவளிக்கு Oman நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Remal எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூறாவளி காரணமாக நாட்டில் பலத்த மழை வீழ்ச்சி, கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் கடந்த நாட்களில் உருவாகிய தாழமுக்கம் இன்று பாரிய சூறாவளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக உருவாகக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.