நெஸ்லே லங்கா மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டாண்மையுடன் பாலுற்பத்தி பெறுமதிச் சங்கியிலியில் பச்சைவீட்டு வாயு உமிழ்வைக் குறைக்கும் முகமாக, மீளுருவாக்க விவசாய நடைமுறைகளை அமுல்படுத்தும் நோக்கத்திற்கு இணங்க, பாலுற்பத்தியாளர்கள் தமது பாலுற்பத்தியை அதிகரிப்பதற்கு, தமது செயல்பாடுகளை விரிவுபடுத்திக் கொள்வதற்காக சலுகை அடிப்படையில் நிதியுதவிகளை வழங்கும் ஒரு முயற்சியாக நெஸ்லே லங்கா நிறுவனம், கொமர்ஷல் வங்கியுடன் கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளது.
பசுக்களிலிருந்து தலாவீத பாலுற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்குத் தேவையான நிலைமைகள் மற்றும் உபகரணங்களைப் பெற்றுக்கொள்ள இலங்கையிலுள்ள பாலுற்பத்தியாளர்களுக்கு உதவுவதற்காக, ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த வட்டி வீதத்துடன், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நிதியியல் தீர்வுகளை பாலுற்பத்தியாளர்களுக்கு வழங்கும் நோக்குடன், பெறுமதிச்சங்கிலிக்கான நிதித் திட்டமொன்றை கொமர்ஷல் வங்கியின் கூட்டாண்மையுடன் நெஸ்லே லங்கா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கடன் திட்டத்தின் ஒரு அங்கமாக, பாலுற்பத்தியாளர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும் முகமாக, அவர்களுக்கு நிதியறிவு மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வை மேம்படுத்துதல் போன்ற சமூக மேம்பாட்டு முயற்சிகளையும் கொமர்ஷல் வங்கி உள்ளடக்கும். இந்த கடன் திட்டத்தின் மூலமாக இந்த ஆண்டு முடிவடையும் போது பாலுற்பத்தியாளர்கள் 300 பேரை எட்டுவதே நெஸ்லே நிறுவனத்தின் நோக்கமாக உள்ளதுடன், இந்த பயனுக்கான முதற்கட்டத்தை முன்னெடுப்பதற்காக அவர்கள் மத்தியில் 25 பாலுற்பத்தியாளர்கள் தெரிவு செய்யப்படுவர்.