கள்ளம் இல்லா(த)
பிள்ளை உள்ளம்!
தொல்லை இல்லாத
கருணை இல்லம்!
அல்லும் பகலும்
அன்பு ஊறும்!
சொல்லில் செயலில்
வாய்மை இருக்கும்!
நானில வாழ்வில்
தூய்மை சுரக்கும்!
நீதி உன்னில்
விழித்துவிட்டால்
அநீதி வாழ்வில்
தூங்கிக் கொள்ளும்!
தியாகம் உன்னை
நிமிர்த்தி விட்டால்
அநியாயம் உன்னில்
அடங்கிக் கொள்ளும்!
பொல்லாமை நீ
பொசுக்கி விட்டால்
நல்லசெயல் உன்னில்
நன்றாய் மலரும்!
நல்லோர் நட்பு
நாளும் வளரும்!
சிறியோர்மீது
கருணை கொண்டால்
சிறப்பாய் வாழ்வு
சீராய் அமையும்!
பெரியோரை நீ
அணைத்துக் கொண்டால்
புனிதம் உன்னில்
பூத்துக் கொள்ளும்!
தீய எண்ணம்
தீச்செயலை நீ
தடுத்துவிட்டால்
வீண்வம்பு வராது
விரண்டோடும்!
நல்லோர் வழியில்
நாளும் நடந்தால்
வையகம் உன்னை
வாழ்த்தி விடும் !
வாய்மை மனிதனென்று
உன்னை போற்றிவிடும்!