111
நாட்டில் e.Passport முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அத்தோடு பாதாள உலக மற்றும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.