மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற SLIoT Challenge 2023 நிகழ்வுக்கு SLT-MOBITEL வலுவூட்டியிருந்தது.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞான மற்றும் பொறியியல் பிரிவு மற்றும் இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல்கள் பொறியியல் பிரிவு குழுவினால் The SLIoT Challenge 2023 ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. IoT பிரிவில் திறமைகளை கட்டியெழுப்புவது, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு கலாசாரத்தை ஊக்குவிப்பது போன்றவற்றில் SLT-MOBITEL கொண்டுள்ள முக்கிய பங்களிப்பை இந்த போட்டி வெளிப்படுத்தியிருந்தது. பரந்தளவு பங்குபற்றுநர்களை ஒன்றிணைத்து, IoT இல் புரட்சிகரமான செயற்திட்டங்களையும், தீர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கான கட்டமைப்பை SLT-MOBITEL வெற்றிகரமாக ஏற்படுத்தியிருந்தது.
இந்நிகழ்வின் வரவேற்புரையை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞான பிரிவின் கலாநிதி. குட்டில குணசேகர ஆற்றியிருந்தார். இந்நிகழ்வில் SLT-MOBITEL பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க பிரதம அதிதியாக பங்கேற்றிருந்தார்.