43
பூத்துக் குலுங்கி காய்த்து ஓய்ந்து
குளிர்வித்த எனதுடல் மெலிந்து
உடை களைந்து தழும்புகளும்
பரிசாகி வாழ்வும் கசந்தது…!
கவனிப்பார் அற்று உதவாதவனாகி
மானிடரால் வெறுக்கப்பட்டு
பட்சிகளோடு பேசிக் கொண்டு வந்த
வழித்தடம் வழியே
நகரக் காத்துக் கிடக்கின்றேன்…!
சிறப்போடு கம்பீரமான தோற்றமதில்
வாழ்ந்து வழிப்போக்கர் இளைப்பாற
தாய் மடியாகி ஆசுவாசப்படுத்திய
உடல்கள் பசுமையற்று
புலம்பியழுகின்றன…!
உலகுக்கு வாசமாகி உயிர்கள்
பலவற்றுக்கு உறைவிடமாகியவன்
இன்று இளமை இழந்து
பட்ட உயிரென்று
ஏளனமாகின்றேன்….!