தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் இதுவரை மூன்று தேர்தல்கள் நடந்தேறியுள்ளன. இறுதியாக நடந்த எல்பிட்டிய பிரதேசசபை தேர்தலை தவிர்த்து இரண்டு தேசிய மட்டத்திலான தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலும் கடந்த நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அவ்விரண்டு தேசிய மட்ட தேர்தல்களாகும். இம்மூன்று தேர்தல்களிலும் தேர்தல் செலவின ஒழுங்குப்படுத்தும் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையை உற்றுநோக்கும் போது அனுகூலங்கள் மற்றும பிரதிகூலங்கள் தொடர்பான தெளிவான பிம்பம் ஒன்று மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் இச்சட்டத்தை மேலும் பலப்படுத்த சட்டங்களை இயற்றுவதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டபின் வேட்பாளர்களுக்கிடையில் விருப்புவாக்கு போட்டி காரணமாக தேர்தல் செலவினங்கள் ஒழுங்குப்படுத்தப்படவேண்டும் என்றும் அதற்காக புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்மெனவும் நீண்டகாலமாக கருத்தொன்று நிலவி வருகிறது. எவ்வாறெனினும்; சட்டம் இயற்றப்பட்டு அமுலுக்கு வந்தமை மகிழ்ச்சியளிக்கும் விடயமே. நடந்து முடிந்த 3 தேர்தல்களின் பின் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பிலும் முழுமையான கவனம் செலுத்தப்பட வேண்டும்.
நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தேர்தல் செலவின அறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழுவிறகு சமர்ப்பிக்காத தேர்தலில் போட்டியிட்ட 1042 வேட்பாளர்கள், கட்சி செயலாளர்கள் மற்றும் சுயேச்சை குழுவின் தலைவர்கள் உட்பட 197 நபர்களின் விபரங்கள் அவர்களின் மீது வழக்கு தொடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் பொலிஸ்மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. தேர்தல் செலவினங்கள்; ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ் தேர்தலொன்றின் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு 21 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் செலவினங்கள் தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவுடம் ஒப்படைக்கப்பட வேண்டும். எனினும் இதுவரை தேர்தலில் போட்டியிட்ட 1042 பேர் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 13 பேர் செலவின அறிக்கையை இதுவரை சமர்ப்பிக்காத காரணத்தினால் அவர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.தேர்தல் செவினங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டம் அழுலில் இருப்பதால் இதுவரை தேர்தல்களில் நடந்த அளவிற்கு அதிகமான செலவினங்கள் இம்முறை தேர்தலில் கட்டுப்பாட்டுக்குள் வந்தமையை காணக்கூடியதாக உள்ளது. இதனை தேர்தல் கண்காணிகப்பாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டம்குறித்து அவதானத்துடன் செயற்பட்டமையும் தெரியவருகிறது. இந்த தொடக்கம் ஓர் முக்கிய விடயமாகப் பார்க்கப்படுகிறது. எவ்வாறிருப்பினும் தேசிய மட்டத்தில் நடந்த இரு தேர்தல்கள் முடிவுற்ற நிலையில் வேட்பாளர்கள்; வேட்பாளர்களின் செலவின அறிக்கைகளை பார்க்கும் போது இரண்டு பக்கங்களை கொண்டதாக ஒப்புக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையென தெரியவருகிறது.
மேலும் சில தேர்தல் செலவின அறிக்கைகளில் செலவினங்கள் தொடர்பான விரிவான விபரங்கள் இல்லாமல் பொதுவான செலவுகளை மட்டுமே சமர்ப்பித்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தேர்தல் பிரசாரம் நடைபெற்ற காலப்பகுதிகளில் பிரசாரங்களை உற்றுநோக்கும் போது அவ்வறிக்கைகளின் உண்மை தன்மை தொடர்பில் பாரிய கேள்விகள் எழுகின்றன. தேர்தல் காலத்தில் பல வேட்பாளர்களின் விளம்பரங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக கோடிக் கணக்கில் செலவழித்திருப்பது தெரியவந்துள்ளது. உதாரணமாக கொழும்பு மாவட்டத்தில் ஓர் பிரபலகட்சியின் பட்டியலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் சுமார் 15 கோடி ரூபாவை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக செலவழித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வளவு பெருந்தொகை பணம் செலவழித்தும் அவ்வேட்பாளர் தேர்தலில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் தேர்தல் செலவின சட்டமூலம் இயற்றப்பட்ட முறைப்படி மேற்கூறிய செலவினங்கள் தொடர்பில் தொடர்புபட்ட எந்தவொரு திணைக்களத்திற்கும் விசாரிப்பதற்கு முறையான அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. செலவின அறிக்கை விபரங்கள் சமர்ப்பித்த மாத்திரத்தில் அதன் உண்மைத் தன்மை தொடர்பில் மக்களுக்கு கருத்து தெரிவிக்க முடியுமென சட்டம் கூறுகின்றது. மேலும் தேர்தல் செலவின சட்டம் தொடர்பில் அறிக்கைகளை ஆராயாது பெற்றுக் கொள்ள மட்டுமே தேர்தல்கள் திணைக்களத்திற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. செலவின அறிக்கைகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பில் முறையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரமுள்ளது. தேர்தல்கள் செலவின ஒழுங்குப்படுத்தும் சட்டம் வரவேற்கதக்க விடயம் எனினும் அதனை செயற்படுத்தும் போது பல சிக்கல்கள் எழுகின்றன. நடந்து முடிந்த தேர்தல்களில் இது தொடர்பாக வேட்பாளர்கள் செயற்பட்ட விதம் அதனை தெளிவாக உணர்த்தியுள்ளது. எவ்வாறிருப்பினும் தேர்தல் செலவின சட்டம் அமுலாக காலப்பகுதியில் தேர்தல் செலவுகள் தொடர்பில் கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பு குழு தேர்தல் வன்முறை மற்றும் இதர விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்பொழுது அந்நிறுவனத்தின் தேசிய அமைப்பாளராக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் இயக்குனரான மஞ்சுள கஜநாயக்கவிடம் இதுபற்றி வினவியபோது ‘தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சிக்குரிய விடயமெனினும் அச்சட்டத்திற்கு மேலும் பல அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமெனக் கூறினார்.
பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல், எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல் ஆகியவற்றில் தேர்தல் செலவின ஒழுங்குப்படுத்தும் சட்டம் செயற்பாட்டில் இருந்தது. அவ்வாறானதொரு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைய வேண்டும். இவ்வாறான ஒரு சட்டம் செயற்பாட்டில் இருந்தமையாலேயே தேர்தல் முறைமையில் உள்ள குறைபாடுகள் எமக்கு தெரிய வருகின்றது. இச்சட்டத்திற்கு மேலும் அதிகாரங்களை வழங்கி நாட்டில் தேர்தல் கலாசாரத்தை மெருகூட்டுவ
அருள்