10
இளமைக் கல்வியை
இழந்த வாலிபன்
வழமையாய் உழைத்து
வளங்கள் சேர்த்தான்..!
சிக்கன வழியில்
சீரோடு வாழ்ந்தான்!
மனையாள் உறவினரும்
‘வினை’யோடு வந்தார்!
ஏதேதோ பத்திரங்கள்…!
சாட்சிக்கு ஒப்பமென
சாகச மனையாள் கூற
வாசியா மன்னன் வைத்தான்!
காலச் சக்கரம் சுழல…
கடிதம் ஒன்று வந்தது..!
கட்டாத கடன் தொகை
இருபது லட்சம் என்றது!
வாங்காத கடனுக்கு
வந்த கடிதம் கண்டு
ஒப்பத்தின் நினைவு வர
சதி கண்டு அதிர்ந்தான்!
சிக்கனத்தால் சிறுக சேர்த்து
இருப்பவை இழந்து விடின்
புதல்விகளின் எதிர்காலம்…?
புலம்பினான் கண்ணீரால்!
தப்ப வழி தேடி
தவித்தும் பலனில்லை..!
மனையாள் மதியாலே
தொங்கினான் தூக்கிலே..!