முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை (25) காலை பெலியத்த பகுதியில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இரத்மலானை பகுதியில் வீடொன்றையும் காணியையும் 34 மில்லியன் ரூபாவுக்கு வாங்கியிருந்தமை தொடர்பாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. இதற்கான பணம் எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்து 2006 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், இவ்விடயம் விசாரிக்கப்படவுள்ளது. இது தொடர்பான கோப்புகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்த பின்னர், அந்த வழக்கில் அவரைப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, சட்ட மாஅதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான யோஷித ராஜபக் ஷவை நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
குற்றப் புலனாய்வுத் துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. காணியின் பிரதான சந்தேக நபர், யோஷித்த ராஜபக் ஷவின் பாட்டியான டெய்சி டொரஸ் என தெரிவிக்கபப்பட்டுள்ளது.