கருவறை இருட்டை போக்க தாய் தந்த அன்பு
உலக தனிமை நீக்க நீ தந்த அரவணைப்பு
இரண்டும் வேறில்லை நாமும் வேறில்லை
உலகம் பிரித்தாலும் பிரியாது நம் நட்பு
தந்தை தாயை மட்டும் கண்டவனுக்கு வாழ்வில்
விந்தையாய் கிடைத்தவனே
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தாலும்
நீயும் நானும் ஒன்றென்பேன்
பள்ளியில் தொடர்ந்த நம் நட்பு
காட்டுப் பள்ளியின் பிரவேசம் வரை
நீ காட்டிய அன்பிற்கு இல்லை கரை
நீயும் என் வாழ்வில் ஓர் மறை
என் அழுகை போக்க தோள் தந்தாய்
என் கதை கேட்க வேலையிலும் நாள் தந்தாய்
தனிமையில் இருந்த என் நாட்களை போக்கி
இனிமை காண வைத்தது உன் அன்பு
நான் செய்த தவறால் தள்ளி நிற்கிறாய்
மன்னித்து விடு இப் பாவியை
காதலை விடவும் நட்பு பெரிதென்றது
நீ என்னோடு பேசாத நொடிப்பொழுது
இறைவனிடம் நிதம் கேட்பது
என் நண்பன் வேண்டும் என்று