கிளிநொச்சியில் கடந்த மாதம் 26 ஆம் திகதி இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுக் கடத்த முயற்சிக்கப்பட்ட தினகரின் பிராந்திய செய்தியாளர் மு.தமிழ்ச்செல்வனை நேற்றைய தினம் (18) தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர், அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.
நேற்று முற்பகல் ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வனின் இல்லத்திற்குச் சென்ற பிரதம ஆசிரியர், அவரின் நலன்கள் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் கரிசனை செலுத்தியதோடு, தாக்குதலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார். இதன் போது தமிழ்ச் செல்வனால் தினகரன் பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதப்பட்டு நூலாக வெளியிடப்பட்ட சூழலியல் பத்திகளின் தொகுப்பு நூலும் தினகரன் பிரதம ஆசிரியரிடம் ஊடகவியலாளரால் கையளிக்கப்பட்டது.