25
பாராளுமன்றம் எதிர்வரும் (21) செவ்வாய்க்கிழமை முதல் (24) வெள்ளிக்கிழமை வரை கூடுகிறது. பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் இது பற்றித் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட Clean Sri Lanka திட்டம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 22 புதன்கிழமையும் விவாதத்தை நடத்துவதற்காக அமர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.