மலையக ரயில் சேவையில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் இருக்கைகளின் தேவை தொடர்பில், எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ரயில்வே திணைக்களம் ஈடுபட்டுள்ளது. இதற்கமைய இந்த ரயில் பாதையில் மேலதிகமாக இரண்டு ரயில்களை சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார். நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து தெம்மோதர ரயில் நிலையம் வரை, சுற்றுலாப்பயணிகளை இலக்காக்கொண்டு, ஒரு ரயிலை ஈடுபடுத்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவை எதிர்வரும் 15 முதல் ஆரம்பமாகும். இதேபோன்று இதற்கு மேலதிகமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கண்டியிலிருந்து மற்றொறு ரயில் சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த ரயில் சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொது முகாமையாளர் கூறினார்.
இணைய வழி ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்வதில் மோசடி நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, குற்றப் புலனாய்வுப்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.