Home » வெற்றிகரமாக நடைபெற்ற GEM SRI LANKA – 2025

வெற்றிகரமாக நடைபெற்ற GEM SRI LANKA – 2025

by Damith Pushpika
January 19, 2025 6:18 am 0 comment

பேருவளை சீனன்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக சங்கம் பெந்தொட்டை சினமன் பீச் ஹோட்டலில் நடத்திய (GEM SRI LANKA – 2025) சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஜனவரி 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் 103 கண்காட்சிக் கூடங்களை உள்ளடக்கியதுடன், அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் (கொள்வனவாளர்கள்) இதில் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.

இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக் கண்காட்சியின் முதல் நாள் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும், இரண்டாம் நாள் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், மூன்றாம் நாள் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவும் பங்குபற்றினர்.

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் ஒத்துழைப்புடன் கண்காட்சி இடம் பெற்றதுடன் சீனன்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக சங்க தலைவர் மர்ஜான் பளீல், ஜெம் சிறீலங்கா தலைவர் ஹில்மி காஸிம் உட்பட உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு காரணமாக எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக நடந்து முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடை பெற்ற இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சிகளில் மிகவும் பிரமாண்டமான கண்காட்சியாக இதை குறிப்பிட முடியும். உலகின் பல நாடுகளிலிருந்தும், உள்நாட்டு வர்த்தகர்கள் அதிகளவில் பங்குபற்றினர். உல்லாசபுரியாக திகழும் பெந்தொட்டை பகுதி இந்த மூன்று நாட்களும் மிகவும் கலகலப்பாக காணப்பட்டது.

இந்தியாவைச் சேர்ந்த (G.K GEMS) அதிபதியும், உலகின் முன்னணி இரத்தினக்கல் வர்த்தகருமான சன்ரன் ராமசாமி (Chandran Ramasamy) மற்றும் (MAHAKAVEE GEMS) அதிபதியும், முன்னணி இரத்தினக்கல் வர்த்தகருமான சுரேஷ் நடராஜன் (Suresh Natarajan) ஆகியோரும் இக் கண்காட்சிக்கு வருகை தந்திருந்தனர்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division