இணையப் பாதுகாப்பு (Cybersecurity) தொடர்பான உலகளாவிய முன்னணி வர்த்தகநாமமான Kaspersky, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான Kaspersky Anti-Virus மென்பொருளின் (நுகர்வோர் பிரிவு) பிரத்தியேக விநியோகஸ்தராக The Technocity Pvt Ltd நிறுவனத்தை நியமித்துள்ளது. இது தொடர்பான நிகழ்வு 2024 டிசம்பர் 18ஆம் திகதி முக்கிய பங்குதாரர்கள், கூட்டாளர்களின் பங்கேற்புடன் கொழும்பில் இடம்பெற்றது.
இணையப் பாதுகாப்பு தொடர்பான அதிநவீன கண்டுபிடிப்புகளுக்கு புகழ் பெற்ற Kaspersky, உலகம் முழுவதும் 200 நாடுகளில் 35 அலுவலகங்களுடன் செயற்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தொடர்ச்சியாக உருவாகி வரும் அச்சுறுத்தல்களை சமாளித்து, 220,000 பெருநிறுவன வாடிக்கையாளர்களையும் மில்லியன் கணக்கான தனிநபர்களையும் பாதுகாத்து வருகிறது. Kaspersky ஆனது, இறுதி முடிவிட (Endpoint) பாதுகாப்பின் முதல்வன் என, Gartner and Forrester ஆராய்ச்சி நிறுவனத்தால் அண்மையில் பெயரிடப்பட்டிருந்தது. அத்துடன் உலகளாவிய ரீதியில் Endpoint பாதுகாப்பு வழங்குநர்களில் முதல் 4 இடங்களில் தனது நிலையை தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகின்றது.
இது தொடர்பில், Kaspersky தெற்காசியாவுக்கான நுகர்வோர் வர்த்தக தலைவர் புர்ஷோத்தம் பாத்தியா தெரிவிக்கையில், “IT நுகர்வோருக்கு தொழில்நுட்பங்களை சந்தைப்படுத்துவதில் பல தசாப்த அனுபவம் வாய்ந்த The Technocity நிறுவனத்துடன் கூட்டுச் சேர்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் சிறு வணிகங்கள் மற்றும் வீடுகள் அதிகம் பாதிக்கப்படக்கூடியவையாக காணப்படுகின்றன. எனவே விழிப்புணர்வையும் அது பற்றிய ஆர்வத்தையும் அவர்களிடையே உருவாக்க எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
The Technocity Pvt Ltd நிறுவனமானது, அதிக தொழில்நுட்ப நிபுணத்துவத்துவத்தையும், அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர் ஆதரவையும் Kaspersky இற்கு வழங்கும்.