NDB வங்கியானது தனது 2025 நாட்காட்டியை அறிமுகப்படுத்தியதன் மூலம் பாரம்பரிய நேரக்கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை மீள்வரையறை செய்துள்ளது. வங்கியின் இந்த புதுமையான உருவாக்கமானது ஒரு நிலையான எதிர்காலத்தை விரிவுப்படுத்தும் வகையில் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கிறது.
NDB யின் 2025 நாட்காட்டி Pal இன் சிறப்பம்சம் என்னவென்றால் செயற்கை நுண்ணறிவால் [AI] செயற்படுத்தப்படும் மெய்நிகர் உதவியாளராக இது ஊடாடலின் எல்லைகளைத் தொடர்கிறது. இருப்பினும், இந்த ஆண்டு, நாட்காட்டியானது ஒரு அற்புதமான ஜப்பானிய காகித சிற்பக்கலையான ஓரிகமி பயணத்தின் ஊடாக பயனர்களை வழிநடத்துவதன் மூலம் ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது.
ஒவ்வொரு மாதத்தின் பக்கமும் எளிய QR குறியீடு ஸ்கேன் மூலம் நாட்காட்டி Pal ஆல் வழங்கப்படும் காகித சிற்ப அறிவுறுத்தல்கள் ஒரு சிக்கலான ஓரிகமி உருவாக்கமாக மாறும்.
இந்த படைப்புகள் வெறும் கலை சார்ந்தவை அல்ல, படைப்பாற்றல் மூலம் உருவாக்கப்படும் ஒவ்வொரு படைப்பும் ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (UNSDGs) இணைக்கப்பட்ட கதையைச் சொல்கிறது.
இந்த புதுமையான படைப்பை கொண்டாடும் வகையில், வங்கியானது நவம் மாவத்தையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் ஒரு உற்சாகமான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. ஓரிகமி பட்டறைகள், வேடிக்கை நிறைந்த ஆச்சரியங்கள் மற்றும் மகிழ்ச்சிகரமான பரிசுகள் போன்ற ஈடுபாட்டுடன் கூடிய செயல்பாடுகளை உள்ளடக்கிய நிலையில் இந்த நிகழ்வானது குடும்பங்கள், நிலைத்தன்மை ஆதரவாளர்கள் மற்றும் குழந்தைகளை ஒன்றிணைக்கும் சந்தர்ப்பத்தை வழங்கியது.