எழுந்த பல
வினாக்களுக்கு ஒரே
பதில் என்னோடு
சேர்ந்து புதைந்தே
போனது.
ஆயிரம் வலிகளை
சுமந்திருக்கும் என்
இதயம் இரக்கம்
இல்லாமல் வீசி
எறிந்தவர்களை பற்றி
தினந்தோறும் பேசிக்
கொண்டிருக்கிறது
அதற்கு
தெரிந்த மொழியில்.
அவன் பாவமென
நினைத்திடாத உலகம்
இதுவென்பதால் என்னை
மிதித்துக் கொண்டே
இருக்கிறது இன்று
வரை நான்
முட்டாளைப் போன்று
நடித்துக் கொண்டே
இருக்கிறேன் என்பதை
அறிந்து கொண்டு.
வஞ்சகத்தால் விழுந்ததை
விட ஏமாற்றத்தால்
அழுது கொண்டே
இருக்கிறேன் இன்னமும்.
வழி தவற
இருந்தாலும் வலிகளுக்கு
மருந்தளிக்க முடியாமல்
இருக்கிறது ஏனோ!
என் வலிகளை
கொண்டு மகிழ்ந்து
புதினம் பார்க்கும்
மானிடர்களை போல
நானும் என்னை
புதினம் பார்த்துக்
கொண்டிருக்கிறேன்
என்றாவது
எனக்கான நேரம்
முடிந்து விடக்
கூடுமென்று.