கண்களில் தொடங்கிய சம்பாஷணை
காதலில் விழும் வரை ஓரே யோசனை
அவளை பாட பல ஒளியாண்டுகள்
தூரம் செல்லும் என் உணர்வு
மனதை மயக்க வைக்கும் அவள் மதி
அவளை தொடர
பயணம் செய்யும் என் பிராண கதி
அவளுக்கென பாடுவேன் காதல் துதி
இத்தோடு தொடங்கும்
எனக்கான காதல் விதி
அலைந்து திரிந்த என் அன்பிற்கு
அடைக்கலம் தந்த மாதா நீ
பரிசுத்தமாக்குவதில் கங்கை நீ
உலகம் காணாத அன்பின் மங்கை நீ
பாவலர்கள் கவிக்கு
அப்பாற்பட்டவள் என் பாங்கி
அவள் நெற்றி வகிட்டில்
நிதமும் விழுந்தேன் மயங்கி
உன்னை ஓர் நாள் காணாவிடில்
பித்து கொள்ளும் என் மனம்
ஆயிரம் வலிகளை சுமந்த
என் இதயத்திற்கு
உன் இதழோர புன்னகை மருந்து
அத்தோடு மனம் செல்லும்
றெக்கை கட்டி பறந்து
இறுதியில் உறுதியாக
பிடிக்க வேண்டும் உன் கரம்
என்னவளே உனக்காக நான்