சர்வதேச மாணிக்கக் கல் ஆபரண கண்காட்சி “FACETS SRILANKA” நேற்று (04) கொழும்பு, சினமன் கிரேன்ட் ஹோட்டலில் வைபவரீதியாக ஆரம்பமானது. ஆரம்ப நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
இக்கண்காட்சியில் இலங்கையின் முன்னணி மாணிக்க வியாபாரிகள் கலந்துகொண்டுள்ளதோடு கொழும்பு, இரத்தினபுரி, பேருவளை மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு வியாபாரிகளின் கண்காட்சி கூடங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பேருவளை இளம் வியாபாரிகளின் காட்சிக் கூடமொன்றுக்கு வருகை தந்த ஜனாதிபதி, மாணிக்க கற்களை பார்வையிட்ட பின் அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். மேற்படி கண்காட்சி தொடர்ந்தும் மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் தாய்வான், பாங்கொக், இந்தியா, இந்தோனேஷியா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் வியாபாரிகளும் பங்கேற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
(அஜ்வாத் பாஸி)