தங்க பிஸ்கட்டுகள் மற்றும் கட்டிகளை கடல் வழியாக கடத்த முயன்ற மூவரை கடற்படையினர் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். கற்பிட்டி பத்தலங்குண்டு தீவுக் கடலில், நேற்று இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றின் பெறுமதி ரூபா முப்பது கோடி என, மதிப்பிடப் பட்டுள்ளது. கல்பிட்டி பத்தலங்குண்டு தீவுக்கு அப்பால் கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், இவை கைப்பற்றப்பட்டன. கண்ணாடி இழை டிங்கி படகொன்றில் இவர்கள், இவற்றை கடந்த முயன்றுள்ளனர். கைதான மூவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடல் வழிகளூடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைத் தளத்துக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இலங்கை கடற்படை கப்பலுக்கு சொந்தமான விஜயா என்ற சிறப்பு அதிவேக கப்பல் குழுவொன்று கல்பிட்டி, பத்தலங்குண்டு தீவுக் கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.இந்த விசேட தேடுதல் நடவடிக்கையிலேயே, இந்தக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.