2024 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஸ்மார்ட் யூத் எக்ஸிபிஷன் & நைட் – 2024’ என்ற 14 இசை நிகழ்ச்சிகளுக்காக தேசிய இளைஞர் சேவை மன்றம் 323 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தொலைநோக்குப் பார்வை ‘ஒரு வலுவூட்டப்பட்ட இலங்கை இளைஞர்’ என்பதுடன், ‘வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உள்ளூர் மற்றும் சர்வதேச வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு இலங்கை இளைஞர்களை வலுவூட்டுவதற்கான வசதிகளை வழங்குவதே’ அதன் நோக்கமாகும். இது தவிர, அதன் முதல் நோக்கம் இளைஞர்களிடையே தேசிய உணர்வுகள், ஒழுக்க உணர்வு, சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகள் பற்றிய புரிதல் இன்னும் தொழிலாளர் பெருமித உணர்வு ஆகியவற்றுக்கான உற்சாகத்தை வளர்ப்பதாகும். மேலும் ‘தேசிய வளர்ச்சித் திட்டங்களில் இளைஞர்களின் பங்கேற்பு’ இரண்டாவதாக வழங்கப்படுகிறது.
இத்தகைய உன்னதமான பணியை நோக்கி இளைஞர்களை வழிநடத்தும் அமைப்பில் 3,234 இலட்சம் ரூபாவை (323 மில்லியன்) செலவுசெய்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் செல்வச் செலவு குறித்து தணிக்கை வினாக்கள் கூட அனுப்பப்பட்டுள்ளன.
செலவிடப்பட்ட பணத்தில் பதுளை மாவட்டம் மஹியங்கனை பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக 64,986,789 ரூபாவும், பண்டாரவளை நகரசபை விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக 20,179,185 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
மேலும், மஹரகம இளைஞர் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 16,667,851 ரூபாவும், காலி சமனல விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 31,417,778 ரூபாவும், அம்பாறை வீரசிங்க விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 9,491,477 ரூபாவும், குளியாபிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக 68,105,908 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
அத்துடன் புத்தளம் கடற்கரை விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 14,834,651 ரூபாவும், தம்புள்ளையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 15,289,150 ரூபாவும், யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 39,037,339 ரூபாவும், ஹற்றன் டன்பார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 234,592 ரூபாவும். சேனநாயக்க மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்காக 14,830,835 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு கெத்தாராமவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 13,685,800 ரூபாவும், கொழும்பு ரேஸ்கோர்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 14,571,192 ரூபாவும், வெலிசர நவலோக மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 60,700 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.
இதில் விசேஷம் என்னவெனில், சில நிகழ்ச்சிகளுக்காக பெருந்தொகையான பணம் மதிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 491 இலட்சம் ரூபா மதிப்பீடு முன்வைக்கப்பட்ட போதிலும் 390 இலட்சம் ரூபாவே செலவிடப்பட்டுள்ளது. மேலும், ஹற்றன் நிகழ்ச்சி 109 இலட்சம் ரூபாவாக மதிப்பிடப்பட்டிருந்த போதிலும் 234,592 ரூபாவே செலவிடப்பட்டுள்ளது. அத்துடன், வெலிசர நிகழ்ச்சிக்கு 421 இலட்சம் ரூபா மதிப்பிடப்பட்ட போதிலும், 60,700 ரூபாவே செலவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேக்கரவிடம் வினவிய போது, இந்த உண்மைகள் அனைத்தும் உண்மை எனவும் தனக்கும் அவ்வாறான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.