சீனாவில் பரவும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) என்பது ஒரு புதிய வைரஸ் அல்ல, தற்போது பரவி வருவது தொற்று நோயும் அல்ல என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியிட்டிருந்தன. ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (Human metapneumo virus) எனப்படும் வைரஸ் நிலை முக்கியமாக பரவுகிறது, மேலும் அவர்களில் கொவிட்-19 நோயாளிகளும் இருப்பதாக வெளிநாட்டு அறிக்கைகள் காட்டுகின்றன. சீனாவில் இன்புளுவன்சா வைரஸ் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸின் பாதிப்பு சீனாவில் வேகமாக பரவி வருவதாகவும், சீனாவின் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ள முடியும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.இதனால், மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, எதிர்வரும் நாட்களில் அறிக்கை வெளியிடப்படும் என்று தொற்றுநோயியல் பிரிவும் தெரிவித்துள்ளது. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, சீனச் சுகாதார பிரிவை மேற்கோள் காட்டியே செய்திகள் வெளியாகியுள்ளன.