இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) ஏற்பாடு செய்திருந்த தேசிய விற்பனை விருதுகள் (NSA) 2024 இல் NDB வங்கி ஒரு முக்கியமான பல விருதுகளை வென்று சாதனையை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டு விழாவில் வங்கியின் விற்பனைக் குழுவானது தனது சிறப்புமிக்க செயல்திறன்களுக்காக, எட்டு விருதுகளைப் பெற்றது. இந்த மாலை நிகழ்வின் சிறப்பம்சமாக கசுன் ஜெயவர்தன, ஒட்டுமொத்த தேசிய விற்பனை முகாமையாளருக்கான தங்க விருதை வென்றார், இந்த விருதானது அவரது தலைமைத்துவத்தையும் விற்பனைச் செயல்பாட்டிற்கு அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. முன்னணி வரிசை வங்கியியல் பிரிவில், நேத்மி குமாரிஹாமி தங்க விருதை பெற்றார். அதே வேளை கவீச வீரரத்ன வெள்ளி விருதைப் பெற்றார், இவ்விருதுகள் வங்கியியல் நடவடிக்கைகளில் முன்னணியில் நின்று சிறப்பான சேவையை வழங்குவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக உள்ளது.
NDB இன் வெற்றியை மேலும் மேம்படுத்தும் வகையில், விற்பனை மேற்பார்வையாளர் வங்கியியல் பிரிவில் இரேஷா ஜயசிங்க தங்க விருதுடன் கௌரவிக்கப்பட்டார், அதே நேரத்தில் சிறந்த செயல்திறன் மற்றும் குழு தலைமைத்துவத்திற்காக எஸ்.வசந்தன் அதே பிரிவில் வெண்கல விருதைப் பெற்றார். சம்மில்பண்டார பிராந்திய முகாமையாளர் வங்கியியல் பிரிவில் சிறந்து விளங்கிய நிலையில் பிராந்திய விற்பனை முகாமைத்துவத்தில் தனது நிபுணத்துவம் மற்றும் மூலோபாய புத்திசாலித்தனத்திற்காக தங்க விருதைப் பெற்றார்.