டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் உறுப்பினரான அசட்லைன் பைனான்ஸ் லிமிடட் நிறுவனம் தனது 58வது கிளையை இல. 19, குறுக்கு வீதி, கண்டி என்ற இலக்கத்தில் திறப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றது. நகரின் மையப்பகுதியில் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள புதிய கிளையானது கண்டி நகர எல்லைக்குள் அமையப்பெறும் அசட்லைன் பைனான்ஸின் இரண்டாவது கிளையாகும். இது கண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவைகளையும், அதிக வசதிகளையும் வழங்குவதற்கான உறுதிப்பாட்டைப் பறைசாற்றுகின்றது.
உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்ட இந்தக் கிளையானது வாகனங்களுக்கான லீசிங் மற்றும் கடன்கள், நுண், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சிகளுக்கான உழைக்கும் மூலதன நிதியை வழங்கும் ‘அசட் ட்ராஃப்ட்’, பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ள ‘லிய திரிய’ மற்றும் கூரைகள் மீதான சூரியப்படலங்களுக்காக வழங்கப்படும் ‘பசுமைக் கடன்’ போன்ற பரந்துபட்ட நிதித் தீர்வுகளை வழங்குகின்றது. வர்த்தக சமூகத்திற்கான நிதித் தீர்வுகளை வழங்குவதில் கூடிய கவனத்தைச் செலுத்தும் அதேநேரம், மக்களின் பல்வேறு நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, நிபுணர் நிதி வழிகாட்டுதல் மற்றும் விதிவிலக்கான வாடிக்கையாளர் சேவையை எளிதாக அணுகுவதையும் உறுதி செய்கின்றது.