இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC தனது புதிய கிளையை பாணந்துறையில் திறந்துள்ளதன் மூலம், அதன் கிளை விஸ்தரிப்பின் மற்றுமொரு கட்டத்தை அடைந்துள்ளது. HNB FINANCEஇன் இந்த புதிய கிளை இல. 31/1, ஹொரணை வீதி, பாணந்துறையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
HNB FINANCEஇன் பாணந்துறை புதிய கிளை திறப்பு நிகழ்விற்கு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் மற்றும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி துரங்க ஹீன்கெந்த ஆகியோரின் தலைமையில் சுப முகூர்த்தத்தில் திறந்து வைக்கப்பட்டதுடன் இந்நிகழ்விற்கு நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவம் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
HNB FINANCE PLC வழங்கும் அனைத்து நிதிச் சேவைகளும் பாணந்துறை கிளையில் கிடைக்கின்றன, மேலும் இந்த சேவைகளில் லீசிங், சேமிப்பு, நிலையான வைப்பு, வணிகக் கடன், வீட்டுக் கடன் மற்றும் தொழில்துறையில் மிகவும் பிரபலமான தங்கக் கடன் சேவை ஆகியவை அடங்கும்.
பாணந்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கக் கடனுக்கான பெரும் தேவை இருப்பதால், HNB FINANCE பாணந்துறை கிளையில் புதிய தங்கக் கடன் மத்திய நிலையத்தையும் அமைத்துள்ளது. HNB FINANCE தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மாறுபடும் பல தங்கக் கடன் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது,