மானிட தேகத்தின்
நரம்பில்லா
ஓர் உறுப்பு
மனிதனை புனிதனாக்க
பயன்படுதே
தாடைக்குள்
ஒளிந்து கொண்டு
தாளம் போடும்
நாக்கு முதலுறுப்பு
உணவின்
அறுசுவை
அறிவதை விட
மானிடனின்
குறை தேடி
ரசித்து ருசி
கண்ட நாக்கு
எப்படி நடப்பது
என்று எனக்கும்
புரியவில்லை….
எப்படி நடந்தாலும்
யாரையாவது
எதையாவது
குறைகண்டு
கதைக்க நாவு
இதயத்துடிப்பை
முந்தி விடுகிறது
கதைக்காமல்
சிறு கல்லினை
வாய்க்குள் வைத்திருந்த
மா மனிதர்
செயல் போன்றும்
சைகை மொழி பேசும்
ஊமையர் போன்றும்
நடிக்க
தோன்றுகின்றது
தன் குறை
வேப்பெண்ணை போலவும்
பிறர் குறை
தேன் போன்றும்
என் நாவுக்கு
உணவில் நாக்கை
சிறு நாய்க்குட்டி போல்
கட்டிப் போட்டு விட்டேன்
பிறரைப் பேசுவதில்
நாவுக்கு பூட்டுப் போட
மந்திரமும் தந்திரமும்
விஞ்ஞானமும்
தோற்றுப் போகுதே
இரண்டாம் உறுப்பு
மர்ம உறுப்பு
இரண்டையும்
பேணி மனித
புனிதனாகி
சுவனத்தை
ருசித்திடுவோம்.