உறவுகளுக்குள் உணர்வோடும் ஒற்றைக்குறி ஒற்றுமை
சங்கீதம் சுழல்கின்ற சுருதியின் ஓசையும்
சொல்லாமல் மூடிவிடும் கண்ணிமையும்
பற்றி விடும் ஐக்கியத்தில் ஐயமுண்டோ
சிற்றெறும்பினது சுவாசத்தில் ஐக்கியத்தின் சாம்பல்கள்
மௌனமாய் இச்சாம்பல்களில் பலம்மிகு வீரங்கள்
அடம்பன் கொடிகளின் புரட்சி சத்தம்
திரண்டால் மிடுக்கெனும் பழமொழி ஆகும்
கஷ்டமெனும் கவிதைக்கு இங்கு வரிகளில்லை
வலிகளெனும் நடைகளுக்கு இங்கு விழிகள் இல்லை
குமிழாய் ஒளிரும் பலமதன் அதிசயம் தான்
துணிச்சலிற்கு துணைபோகும் ஆழ்ந்த அர்த்தமிது
காளான்களின் நெருக்கத்தில் சுருண்டு விழும்
ஒற்றுமை நடனம் பலமாகும் நிழலே
நிழலிலொரு நிஜம் தேடுகிறேன் இங்கே
ஒற்றுமையே பலமாகுமெனும் வார்த்தை மீள்கிறதிங்கே