கவலை விளைவித்த ஆண்டுகள் போல்
கடந்த ஆண்டும் துயரம் இந்தாண்டும் தான்
பாவத்தை செய்த இரண்டாயிரத்து
இருபத்திநான்கே இனி
இந்த பூமியில் வந்து பிறக்காதே
நல்லது புரிவாய் யென்று நாங்களும்
நம்பியிருந்தோம்
கண்ணீர் தந்து எமக்கு
கவலையும் நீ தந்து விட்டாயே
அகதியாய் போனவர் களுக்கு
மீள் குடியேற்றம் இனியும் தாமதம்
காணாமல் போன வர்கள் கதை
காலதாமதமாகி போனதேனோ—-!
இன்னும் தீரவில்லை
துன்பங்களும் அகலவில்லை
சொன்னாலும் புரியலை
தொல்லைகளும் தீரவில்லை
கவலை போக்க
கண்ணீர் விட்டழுதோம்
துயரத்தை தந்தஆண்டே-
இன்றே போய்விடு–
இன்னலை தந்த
இருபத்திநான்கே போய் விடு
இன்பத்தை தரும் இருபத்து ஐந்தே வா–!
வந்து போகும் ஆண்டாக இல்லாமல்
வசந்தம் பூக்கும் ஆண்டே வா–?
பூத்துப் பூக்கும் புத்தாண்டே…
புவனம் பூக்க வந்திருந்தார்
மாற்றத்தை தந்தது போல்
மறுமலர்ச்சியும் கொண்டு — வா
சமாதானம் தழைத்தது போல
சமதர்ம மும் பூக்க வைப்பாய்
நிதானம் நிகழ வேண்டி
நிம்மதி ஆண்டாக நீ ஓடி வா