வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய ‘பிஞ்சு மனம்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா 2025 ஜனவரி 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கலாபூஷணம், கவிஞர் திக்குவல்லை ஸப்வான் தலைமையில் நடைபெறவுள்ளது. தொழிலதிபர் எம்.சீ. பஹார்தீன், கலைஞர் அக்குறணை சஹாப்தீன் கௌரவப் பிரதிகளை பெற்றுக்கொள்ளவுள்ளார்கள்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் விசேட அதிதியாக தொழிலதிபரும் சமூக சேவையாளருமான எம்.ஏ.ஸீ. மஹ்ஸும் கௌரவ அதிதிகளாக அஸ்ஸெய்யத் ஹனீப் மௌலானா, பிரபல தொழிலதிபர் ஏ.ஆர்.எம். அரூஸ் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் உளவளத்துறை விரிவுரையாளர் யூ.எல்.எம். நௌபர், மூஷான் இன்டர்நெஷனல் தலைவர் எம். முஸ்லிம் ஸலாஹுதீன், முன்னாள் அல்ஹிதாயா அகதியா பாடசாலை அதிபர் ஜனாப் எம்.எச்.எம். நஸீர், அக்ரம் பவுன்டேசன் தலைவர் ரீ.ஏ. முஹம்மத் அக்ரம், அப்துல்லாஹ் இன்டஸ்ட்ரீஸ் அன்ட் பெகேஜிங் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் ஏ. ஹசன் முபாரக், டிரான்ஸ் ஏஸியா தொழிலதிபர் எம்.வை.எம். முகர்ரம், தொழிலதிபர் எம்.ஏ.எம். இல்ஹாம், அமேசன் கல்லூரி நிறுவனர் ஜனாப் இல்ஹாம் மரிக்கார் ஆகியோரும் கலந்துகொள்வார்கள்.
சிறப்புப் பிரதிகள் பெறும் ஊடக அதிதிகளாக ஜனாப் என்.எம். அமீன், டாக்டர் ஞானம் ஞானசேகரன், கலைஞர் ராதா மேத்தா, ஜனாப் எம். சித்திக் ஹனீபா, திருமதி எம்.ஜே. பாத்திமா ரினூஸியா, ஜனாப் ஏ.எம்.எம். ரழீம், ஜனாப் எம்.எஸ்.எம். ஜின்னா, ஸில்மியா ஹாதி, கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன், ஜனாப் முபாரக் முகைதீன், ஜனாப் ஏ.எம். தாஜ், ஜனாப் அஷ்ரப் அமீர், ஜனாப் ஷம்ஸ் பாஹிம், கே. ஈஸ்வரலிங்கம், எம்.பீ.எம். பைரூஸ், தமிழன் பிரதம ஆசிரியர் சிவா ராமசாமி, ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.