இனிய நந்தவனம் மாத இதழ் ஏற்பாட்டில் கொடைக்கானலில் 27.- 12. 2024 அன்று. சாலிகா இன்டர்நேஷனல் ஹோட்டலில் கவிதைத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
கொடைக்கானல் முன்னாள் நகர்மன்றத் தலைவர் மா. ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கவியரங்கம், கவிதைக் குறித்து கலந்துரையாடல், கருத்தரங்கம் என முழு நாள் நிகழ்வாக கவிதைத் திருவிழா நடைபெற்றது. கவிஞர் ம. திருவள்ளுவர் தலைமையில் ‘நல்லதோர் வீணை செய்வோம்’ என்ற தலைப்பில் கவிஞர் பீர்முகம்மது,
கவிஞர் இளவரசி முருகவேல், கவிஞர் நித்யா, கவிஞர் சந்திசேகரன், கவிஞர் பெளசியா பர்வீன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
கவிதை என்பது என்ற தலைப்பில் கவிஞர் கண்மணிராஜா முகம்மது உரை நிகழ்த்தினார்.
கவிதையும் காலமும் என்ற தலைப்பில் கவிஞர் அன்பு சிவா, பேராசிரியர் வெண்ணிலா ஆகியோர் கலந்துரையாடல் நிகழ்த்தினர். கொடைக்கானல் அன்னைத் தெரசா கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் மற்றும் மலையாள கவிஞர் ஜெயலட்சுமி ஆகியோர் கவிதை வாசித்தனர்.
நிறைவாக கொடைக்கானல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ். அப்துல்கனிராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அனைவருக்கும் சான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்கினார்.