நாடளாவிய ரீதியில் மருந்தாளர் (pharmacists) இல்லாது சுமார் 3000 க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் இயங்கி வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மருந்தாளர் பேரவை Pharmacy Council நடைமுறைப்படுத்தப்படாதமை, ஒழுங்குமுறை இல்லாமை, மருந்தகங்களுக்கான உரிமம் பெற்ற சில மருந்தாளர்கள் உரிய மருந்தகத்துக்குப் பதிலாக வேறு இடங்களில் பணிபுரிபவை என்பவையே இதற்கு முக்கியக் காரணமெனவும் அறிய முடிகின்றது.மேலும், மருந்தகங்களுக்கான உரிமம், தவறாக பயன்படுத்தப்படும் சம்பவங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு முதல் மருந்தாளர் பேரவையை அமைப்பதற்கு உரிய வரைபு தயாரிக்கப்பட்டு வந்தது.இருந்த போதிலும், அதனை நடைமுறைத்தாது புறக்கணித்தமையால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், 2018இல்,உலக சுகாதார நிறுவனம் (WHO) இதை நடைமுறைப்படுத்த வேண்டுமென கூறியபோதும், அதில் கவனம் செலுத்தப்படவில்லை. 2020-2025 ஆம் ஆண்டுக்கான மருந்துக் கொள்கை மீளாய்வு கூட, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட வில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையால்,மருந்தகங்களில் தரமான மருந்துகளை பெறுவதில் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவவிடம் கேட்ட போது, மருந்தாளர்கள் பேரவை இயங்கினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். நாடளாவிய ரீதியில் மருந்தாளர்களின்றி பல மருந்தகங்கள் ஏற்றக் கொள்கிறோம். இந்நிலைமை நோயாளிகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றார்.