ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில், சவூதி அரேபியாவில் புகழ்பெற்ற முக்கியமான இமாம்களில் ஒருவரான அஷ்ஷேய்க் காரி முஹம்மது சஆத் நுமானி காத்தான்குடிக்கு நேற்று முன்தினம் (27) விஜயம் செய்தார்.
காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய பள்ளிவாசலில் அவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. அங்கு ஜும்ஆ பேருரை, தொழுகையை நடத்திய அவர், பல இனிமையான குரல்களில் புனதி அல்-குர்ஆனையும் ஓதிக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து மஹ்ரிப் தொழுகையை ஏறாவூர் பெரிய மீரா ஜும்ஆ பள்ளிவாசலிலும் இஷா தொழுகையை வாழைச்சேனை முஹைத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலிலும் அவர் நடத்தினார்.
அஷ்ஷேய்க் முஹம்மது சஆத் நுமானி சவூதி அரேபியா மக்கா ஹரம் ஷரீபின் தலைமை இமாமான அஷ்ஷேய்க் சுதைஷின் குரல் உட்பட பல்வேறுபட்ட இமாம்களின் குரல்களில் புனித அல்குர்ஆன் வசனங்களை ஓதக்கூடிய சிறந்த “காரியாக” திகழ்பவரென்பது குறிப்பிடத்தக்கது.