முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனவரி (03) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக சொத்து குவிப்பு தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் அவருக்கு அறிவித்துள்ளது. இதற்கிணங்க எதிர்வரும் (03) குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருவதாக அவர் அறிவித்துள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியிடமும் குற்றப் புலனாய்வுப் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
நேற்று முன்தினம் (27) அவரிடம் சுமார் 04 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிய வருகிறது.
நெவில் வன்னியாராச்சியின் பெயரில் உள்ளதாக தெரிவிக்கப்படும் பெருந்தொகையான சொத்துகளை, அவர் எவ்வாறு பெற்றுக்கொண்டாரென்பது தொடர்பிலேயே,விசாரணை நடத்தப்பட்டுள்ளது.