இல்லறபந்தம்
இதயத்தை இணைக்கும்!
இதய உணர்வுகளை
பிணைக்கும்!
நல்லெண்ணங்களை
நாளாந்தம் படிக்கும்!
நல்லறங்களை
நயமாக வடிக்கும்!
இல்லறத்தால்
இதயங்கள் இனிக்கும்!
இல்லத்தோர்
நாமங்கள் தொனிக்கும்!
இல்லறபந்தம்
சொந்தங்களை
தொடரச் செய்யும்!
உறவுகளையும்
உணர்வுகளையும்
படரச் செய்யும்!
நேசத்தையும்
பாசத்தையும்
இல்லறபந்தம்
இதயத்தில் ஊட்டும்!
உதயத்தை
வாழ்விலே காட்டும்!
இல்லற இணைவால்
இருமனம் ஒருமனமாகும்!
திருமண உறவு
ஓருயிராகும்!
திருமணத்தாலே
நறுமணம் வீசும்!
மறுமலர்ச்சி
வாழ்விலே காணும்!
மகிழ்ச்சிப்பூக்கள்
மணவாழ்வில் பூக்கும்!
மனிதமும் புனிதமும்
மனதாலே நோக்கும்!
இரத்தபந்தத்தை
இந்த
இல்லறபந்தம்
அர்த்தப்படுத்தும்!
சொந்தத்தை
தூய்மைப்படுத்தும்!
இறுதிவரை
இல்லறபந்தம்
இருக்கும்!
இனிய உணர்வுகளே
இதயத்தில்
சுரக்கும்!