உற்ற துயரகல நித்தமும் உனைவேண்டி
பரிவுடனே ஆராதனை செய்தோம் ஆண்டவரே
சுற்றமெல்லாம் சுந்தரமாய் பூவுலகில் வாழ
இயேசு பாலனே பாவங்ளை இரட்சிப்பீ ராக
மனித குலம் மீட்சிபெற இவ்வையகத்தில்
சிலுவை சுமந்து கசையடியும் பட்டாய்
மனித நேயமேயில்லாத கயவர்களால்
முள்முடி சூட்டப்பட்டு செங்குருதி சிந்தினீரே
மாட்டுத் தொழுவமதில் பெத்தலகேம் நகரில்
கன்னி மரியாள் தேவ மகனாகப் பிறந்தீரே
மானிலம் உய்ய பிறந்தது தேவ குமாரனென்று
அறியாத உலகில் அற்புதங்கள் பல செய்தீரே
கர்த்தரின் கருணையினால் வந்துதித்த பாலனே
பாவத்தின் சம்பளமாய் வாடும் மக்களின்
களங்கமுறு வாழ்வில் நிம்மதி தந்திட
மீட்பராக வருகின்ற தேவபாலனே வருக
இயற்கயின் சீற்றமும் எம்மையும் தாக்க
நோயும் வறுமையும் வந்தெம்மை ஆட்கொள்ள
இந்த வையத்து மாந்தர் ஆனந்தமாய் வாழ
வழிகாட்டி உய்விக்க தேவபாலனே வருக!