Home » கிழக்கு பல்கலையின் முன்னாள் உபவேந்தர் கடத்தல் விவகாரம்

கிழக்கு பல்கலையின் முன்னாள் உபவேந்தர் கடத்தல் விவகாரம்

CID யில் கருணா வாக்குமூலம்

by Damith Pushpika
December 22, 2024 7:45 am 0 comment

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டது தொடர்பாக, குற்றப் புலனாய்வு பிரிவினரால் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கொழும்பில் நடைபெற்ற இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு மட்டக்களப்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது, இனம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சி.ஐ.டியினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் கருணா அம்மானை சி.ஐ.டி யினர் விசாரணைக்கு அழைத்தனர்.இதையிட்டு அவர் நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள சி.ஐ டிக்கு சென்று வாக்கு மூலங்களை வழங்கிவிட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணா அம்மான், உபவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division