விமானப்படையின் விமானங்களை பல்வேறு தனிப்பட்ட பயணங்கள் மற்றும் தேவைகளுக்காக பயன்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் 15 பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளன. இவர்கள், 66 தடவைகள் இந்த விமானங்களை பயன்படுத்தி உள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, இலங்கை விமானப்படை தலைமையகத்திலிருந்து இந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, தயாகம, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க, அபேவர்தன, ராஜித சேனாரத்ன, சாகல ரத்நாயக்க, எம்.எச்.எம். ஹலீம், ஜோன் அமரதுங்க, அஜித் நிவாட் கப்ரால், ரொஷான் ரணசிங்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச மற்றும் அலி சப்ரி ஆகியோர் இவ்வாறு இந்த விமானங்களை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளனர். 2019 முதல் 2020 வரையிலான காலப்பகுதியில், விமானப்படை விமானங்களை இவர்கள் தமது போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளனர். இந்தப் பயணங்களுக்கான நிதி, அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.