Home » இலங்கையுடனான நிதி வசதிகள் 03 ஆவது மீளாய்வின் இணக்கம்

இலங்கையுடனான நிதி வசதிகள் 03 ஆவது மீளாய்வின் இணக்கம்

IMF நிறைவேற்று சபை ஆராய்வு

by Damith Pushpika
December 22, 2024 6:00 am 0 comment

இலங்கையுடனான விரிவாக்கப்பட்ட நிதி வசதிகள் ஒப்பந்தத்தின் மூன்றாவது மீளாய்வின் போது எட்டப்பட்ட பணியாளர் மட்ட இணக்கப்பாடுகள் தொடர்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஆராயவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் செய்தியாளர் சந்திப்பில் இதன் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் Julie Kozack தெரிவித்துள்ளதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, எதிர்வரும் மாதங்களில் கூடவுள்ளது. இந்த ஆய்வு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டதும், நிறைவேற்றுக் குழு அதற்கான அனுமதியை வழங்கும். இதன் பின்னர், இலங்கைக்கு மேலும் 333 மில்லியன் டொலர்கள் கொடுப்பனவு கிடைக்கப்பெறும் என்றார். இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மீளாய்வு கூட்டத்தின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையில், பல்வேறு வரி சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது பதிலளித்த Julie Kozack இந்த விடயங்களும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையில் முன்வைக்கப்படவுள்ள மீளாய்வு அறிக்கையில் உள்ளடக்கப்படும் என்றார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division