வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடினார்.
பிரதமரின் அலுவலகத்தில் வைத்து இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தலைமன்னார் பகுதியில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை பொதுமக்களின் பாவனைக்காக மீள ஒப்படைக்க வேண்டும் என அவர் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம், இலங்கையிலிருந்து சபரிமலைக்கு செல்லும் யாத்திரிகள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமரிடம் எடுத்துரைத்தார். இவர்களுக்கான விமான பயணக் கட்டணத்தை சலுகை விலையில் சீராக பெறுவதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.